சூடான செய்திகள் 1

மஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை ஐவர் அடங்கிய நீதிமன்ற குழுவின் ஊடாக விசாரணை செய்யுமாறு மனு ஒன்றினை ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணியினால் இன்று(13) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு நேற்று(12) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த வழக்கை 14 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் 17 பேரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பொலிஸ் விசேட அறிவிப்பு

“சஹ்ரானின் வகுப்பில் கலந்துகொண்ட அப்துல்லாவுக்கு விளக்கமறியல்”

திகன சம்பவம் குறித்து அமைச்சர் மங்கள