சூடான செய்திகள் 1

கைவிடப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் வயல் பரப்பு

(UTV|COLOMBO)-கைவிடப்பட்ட வயல்களில் மீண்டும் பயிர்செய்கை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை பெரும்போகத்தில் 27 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த சிறுபோகத்தின் போது கைவிடப்பட்டிருந்த 13 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் வயல் பரப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு லட்சத்து 14 ஆம் ஏக்கர் நிலப்பரப்பு பயிர் செய்வதற்கு சிறப்பான மட்டத்தில் உள்ளதாக விவசாயத்துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு விளக்கமறியல்

நீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை

இம்முறை பட்டாசு விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு