சூடான செய்திகள் 1

ஹம்பந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்-பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

(UTV|COLOMBO)-ஹம்பந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்று (12) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற கைகலப்பில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுவன பிரதேசத்தில் சட்ட விரோத மதுபானம் உற்பத்தி செய்யும் இடம் ஒன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 50 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாரை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்களினால் பொலிஸார் மீது கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரதேசத்தில் டயர் எரித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாபபு நடவடிக்கையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதியில் கண்ணீர் புகை மேற்கொண்டு பொது மக்களை அவ்விடத்தில் இருந்து கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம்…

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று