சூடான செய்திகள் 1

போலி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடுபவர் கைது

(UTV|COLOMBO)-கல்னேவ, கலங்குட்டிய பிரதேசத்தில் போலி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஒரு தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சகம் ஒன்றில் போலி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் அச்சிடப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 42 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், 08 வாகன வருமான வரிப்பத்திங்கள், மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள், பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட போலி ஆவணங்கள் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்னேவ, கலங்குட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை முன்மொழிவு

கம்பெரலிய விசேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 47 புதிய கிராம வீதித் திட்டங்கள்

ரோஹித போகொல்லாகம சஜித்திற்கு ஆதரவு