சூடான செய்திகள் 1

புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி அடுத்த வாரம்…

(UTV|COLOMBO)-கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தரம் 5 பரீட்சையின் பின்னர் உயர் ரக பாடசாலைகளுக்கு பிரவேசிப்பதற்கும், அரச புலமைப் பரிசில் நிதியைப் பெறுவதற்கும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய ஆகக் குறைந்த பரீட்சைப் புள்ளியைக் குறிப்பதாக இந்த வெட்டுப் புள்ளி அமையவுள்ளது.

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் இலகுவானதாக காணப்பட்டதனால், வெட்டுப் புள்ளிகள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இப்பரீட்சைக்கு சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தோற்றியதாகவும் கூறப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

சிலாபம் – குருநாகல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் வைத்தியசாலையில்

பாராளுமன்றத்தில் கடுமையான குழப்பநிலை மற்றும் பதற்ற நிலை 

நிலாவுக்கு செல்லும் முதல் பெண்