சூடான செய்திகள் 1

சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரணதரப் பரீட்சை தொடர்பில், நாளாந்தம் 3 அல்லது 4 முறைப்பாடுகள் கிடைப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், முறைப்பாடுகள் குறித்து பரிசீலிப்பதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித கூறியுள்ளார்.

அடையாளங் காணப்பட்டுள்ள 3,000க்கும் மேற்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் மேலதிகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி பரீட்சையில் தோற்றிய மாணவர் மற்றும் அவருக்கு உதவிய ஆசிரியர் மீது விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

மழையுடனான வானிலை…

தேயிலை தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம்: சகோதரரின் கனவர் தப்பியோட்டம்

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு