சூடான செய்திகள் 1

பல பகுதிகளுக்கு இன்றும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.

கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

வெடிச் சம்பவத்தில் சமையல்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்ன உயிரிழப்பு

ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி மீட்பு – பொலிஸ்

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்