சூடான செய்திகள் 1

தாய் நாட்டிற்காக தீர்மானங்களை மேற்கொண்டு தைரியமாக செயற்படும் ஜனாதிபதியை அனைத்து மஹாசங்கத்தினரும் ஆசிர்வதிக்கின்றனர்

(UTV|COLOMBO)-சில தரப்பினரின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் நாடு என்ற ரீதியில் சவால்களுக்கு முகம்கொடுத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் எப்போதும் நாட்டுக்காகவே தீர்மானங்களை மேற்கொண்டு தைரியமாக செயற்பட்டுவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அனைத்து மஹாசங்கத்தினரினதும் ஆசிர்வாதம் இருப்பதாக சங்கைக்குரிய திம்புலாகலை தேவாலங்கார தேரர் தெரிவித்தார்.

மன்னம்பிட்டிய பாலத்திற்கு அருகில் ஸ்ரீ வாலுகானதீ பௌத்த மத்தியநிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி யின் பங்குபற்றுதலுடன் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விசேட உரை நிகழ்த்தும் போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று தேசிய ரீதியாக பாரிய பணியொன்றை நிறைவேற்றிவருவதனைப் போன்றே சாசனத்தின் மேம்பாட்டிற்காகவும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான சேவையை வழங்கி வருவதாகவும் சங்கைக்குரிய தேரர் மேலும் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் ஸ்ரீ வாலுகானதீ பௌத்த மத்திய நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் புத்தர் சிலையை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்விலும் கலந்துகொண்டார். புத்தர் சிலைக்கு முதலாவதாக இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
பொலன்னறுவை பௌத்த சங்கத்தினதும் மேலும் சில நன்கொடையாளர்களினதும் பங்களிப்பில் இந்த புதிய புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்இ இதற்கு பங்களித்தவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புகள் ஜனாதிபதி; வழங்கினார்..
பொலன்னறுவை இசிபதன விகாராதிபதி சங்கைக்குரிய உடகம தம்மானந்த நாயக தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு நல்லாசி வழங்கினர்.

மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரதேசத்தை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Related posts

NTJ அமைப்பின் நிதி கட்டுப்பாட்டாளர் கைது

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்…

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு