சூடான செய்திகள் 1

பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தடுத்து உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய நீதியசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் இன்றைய தினம் நான்காவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த வர்த்தமானி அறிவித்தலை தடுத்து நாளைய(8) தினம் வரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி – அரசாங்க அதிபர்கள் இடையே விசேட கலந்துரையாடல்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார

ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு…