சூடான செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும்

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொள்கின்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் இன்று தொடரவுள்ளது.

நாளாந்த அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த திங்கட் கிழமை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், புதிய உடன்படிக்கையின் அடிப்படையில் நாளாந்த அடிப்படை வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

அதேநேரம் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் முன்னாள் பிரதமர்களுடன் இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, அரசாங்கத்தின் ஊடாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும், நாளாந்த அடிப்படை வேதனத்தை 600 ரூபாவிற்கு மேல் அதிகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் முதலாளிமார் சம்மேளனம் உறுதியாக இருக்கிறது.

இந்தநிலையில் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபடுமாறு கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்திருந்தது.

 

 

Related posts

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை

கம்பனி பதிவாளர் திணைக்கள நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிப்பு – திங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும் ஒன்லைனில் பதிவு

கண்டி நகரில் கடும் வாகன நெரிசல்