சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் இடைக்கால தடை நீடிப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான இன்றைய(06) விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைய தினமும்(07) மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளைய தினம்(07) வரை விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கஞ்சிப்பானை இம்ரானை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் ஐந்தாவது நாள் இன்று(18)

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு