புகழ்பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் எட்டி மர்பி (வயது 57). இவருக்கு தனது முன்னாள் காதலிகள் பவுலெட் மேக்நீலி, டாமரா ஹூட் ஆகியோரின் மூலம் எரிக் (29), கிறிஸ்டியன் (28) என 2 மகன்களும், பெல்லா ஜாஹ்ரா (16), ஜோலா இவி (18), ஷேனே ஆத்ரா (23), பிரையா (28) என 4 மகள்களும் உள்ளனர். முன்னாள் மனைவி நிக்கோல் மிட்செல் மர்பி மூலமாக மைல்ஸ் மிட்செல் (25) என்ற ஒரு மகனும் இருக்கிறார்.
மேலும், மெலானி என்ற பெண்ணின் மூலமாக ஏஞ்சல் ஐரிஸ் மர்பி பிரவுன் (11) என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில், பைகே பட்சர் என்ற பெண்ணை 2012-ம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார். இந்தப் பெண்ணின் மூலம் எட்டி மர்பிக்கு 2 வயதில் இஸ்ஸி ஊனா மர்பி என்ற மகள் இருக்கிறார்.
இப்போது பட்சருக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தை ஆண் குழந்தை. குழந்தைக்கு மேக்ஸ் சார்லஸ் என பெயரிட்டுள்ளனர். இதன்மூலம் எட்டி மர்பி 10 குழந்தைகளின் தந்தை ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.