சூடான செய்திகள் 1

அலி ரொஷானுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி முதல் தொடர் விசாரணை

(UTV|COLOMBO)-சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை பெப்ரவரி மாதம் 13ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்க கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், வழக்கை விசாரிப்பதற்கு திகதி அறிவிக்குமாறும் அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி வழக்கை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறும் உத்தரவிட்டது.

 

 

 

 

Related posts

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை…

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை