சூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு – எந்தவொரு கட்சிக்கும் அழைப்பில்லை

(UTV|COLOMBO)-நாளைய தினம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கோ அல்லது வேறு கட்சிக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு நாளைய தினம் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டின் போது, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட கருத்து வெளியிடுவார் என மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

தாமதமான தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(21)அடையாள பணிப்புறக்கணிப்பில்

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியுடன் அரசியல் கட்சிகள் இணைவு