(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எமது செய்தி பிரிவிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின், பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு நிபந்தனைகள் அடிப்படையிலேயே ஆதரவு வழங்க வேண்டும் என்ற, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான டெலோ அமைப்பின் கோரிக்கைக்கு அமைய, நாளை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.