வணிகம்

பழச்சாறு சீனிக்கான வரி குறைப்பால் ஏற்பட்டுள்ள நன்மை

(UTV|COLOMBO)-பழச்சாறு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளமையினால், அவற்றின் உற்பத்தி பொருட்கள் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த நடவடிக்கை தமக்கு நன்மையை ஏற்படுத்தும் என உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தெரிவிதுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பழச்சாறு மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது, அந்த உற்பத்தி பொருட்களில் கலக்கப்படும், ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை, 30 சதமாகக் குறைப்பதற்கு நிதி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், இரசாயன சுவையூட்டிகளுக்காக 6 கிராம் வரையும், பழச்சாறு வகைகளுக்காக 9 கிராம் வரையும் வரியை குறைக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்மூலம் அவற்றின் பாவனையும் மக்கள் மத்தியில் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்யும் Pelwatte

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்

நியூயோர்க் முக்கிய வைபவம் ஒன்றில் சொக்லேட் டீ பானம்