சூடான செய்திகள் 1

இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுப்பார்

(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்புன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இன்னும் இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுப்பார் என கூறினார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தற்போதைய அரசியல் நிலமை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறினார்.

 

 

 

Related posts

மன்னாரில் கைவிடப்பட்ட நிலையில் கேரளக் கஞ்சாப்பொதிகள் மீட்பு

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல்…

” முஸ்லிம்” என்ற பதத்தை நீக்கிய சட்டமூலத்திற்கு ரவூப் ஹக்கீம் ஆதரவா? ஏன் கையொப்பம் இடவில்லை?