(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரதன தேரர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்து விசேட உரையொன்றினை ஆற்றியிருந்தார்.
“ தற்போதைய பாராளுமன்றத்தில் ஒரு புதிய அரசாங்கத்தை நியமிப்பதற்கு நான் செய்த முயற்சியினை கௌரவமாக நினைக்கிறேன்.
நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்று சேர்ந்து பாரியளவிலான அர்ப்பணிப்பினை மேற்கொண்டோம். கடந்த அரசு கொழும்பு நகரினை சூதாட்ட நகரமாக மாற்ற முனைந்த போது நான் அதனை எதிர்த்து நின்றேன். இன்றும் நான் எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நாட்டுக்காக கதைப்பேன். ஜனாதிபதிக்கு ஏசுவதால் குறித்த பிரச்சினை தீராது. எமது அரசியலமைப்பினை கொண்டு செல்ல அரசியலமைப்பு சபை மற்றும் நிர்வாகத்திற்கு இடையே உடன்பாடு ஒன்று வேண்டும். பயங்கரவாதத்தினை தோற்கடித்தோம்…..”