சூடான செய்திகள் 1

ஜனாதிபதியுடன் கலந்துரையாட நாம் செல்வதில்லை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி அரசியலமைப்பு சட்டத்திற்கு கீழ் அடிபணியும் வரையில், ஜனாதிபதியுடன் எவ்வித கலந்துரையாடலும் இல்லை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தற்போதைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

“சூழ்ச்சியுடன் கூடிய சர்ச்சை ஒன்றுக்கு, அமைதியான முறையில் மேசையினை சுற்றி இருந்து தீர்வு காணமுடியாது.. அதனை தீர்க்க வழியொன்று உள்ளது.. அதுதான் அரசியலமைப்பு.. 17வது சீர்திருத்தத்திற்கும் 19வது சீர்திருத்தத்திற்கும் நாம் அதரவு வழங்கினோம்.. அரசியலமைப்பிற்கு ஜனாதிபதி முதல் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அடி பணிய வேண்டும்..” எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

Related posts

குடைசாய்ந்த கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு

ரஞ்சித் சொய்சா எம்.பி க்கு விளக்கமறியல்

2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்

editor