சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்றும்(29) கூடப்படுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு இன்று (29) காலை 10.30 மணிக்குக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற அமர்வுக்கு இன்றும் பொதுமக்கள் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் நுழையும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் 9 மணிக்கு இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இக்கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் இக் கலந்துரையாடலில், பாராளுமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இன்று இடம்பெற உள்ள கட்சித்லைவர்கள் கூட்டம் மற்றும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதா இல்லையா என இதுவரையிர் தீர்மானிக்கவில்லை என ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.

Related posts

பிரதான பாதையின் புகையிரத சேவைகளில் காலதாமதம்

இம்முறை பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு 2985 தானசாலைகள்

வருட இறுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்