(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்துதல், கருத்தரங்குகள் மற்றும் மாதிரி வினாத்தாள் விநியோகித்தல் என்பனவற்றிற்கு இன்று(27) நள்ளிரவு 12.00 மணியுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி எந்தவொரு தனி நபரோ நிறுவனமோ செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு செயற்படும் நபர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 உடனடி அழைப்பு பிரிவிற்கு அல்லது பொலிஸ் தலைமையகத்தின் 0112 421 111 என்ற இலக்கத்திற்கு அல்லது 119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல்களை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகி 12ம் திகதி நிறைவடையவுள்ளது.