(UTV|INDIA)-நேற்று இன்று நாளை படத்தை இயக்கியவர் ரவிக்குமார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடி ரகுல் பிரீத் சிங். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அறிவியல் சம்பந்தப்பட்ட கதையாக இது உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிப்பதாக கூறப்படுகிறது. வானிலை ஆராய்ச்சியாளராக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை.