சூடான செய்திகள் 1

வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று(26)

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று(26) இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழில் அமைச்சு ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில், அதற்கு முன்னதாகவே தொழிற்சங்கள் தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தன.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான அடிப்படை வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் மீண்டும் நாளை திறப்பு

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் இருவர் கைது

சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை