இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கத்தில் புதிய தோற்றம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் வாரங்களில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், மற்றவர்களுடன் எளிதில் இணையும் வகையில் வழிமுறைகளை சோதனை செய்வதாக தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னதாகவே, சில பயனர்களின் ப்ரோஃபைல் பக்கத்தின் மேல் சில அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து இருக்கின்றனர்.
புதிய மாற்றங்களின் படி புதுவித ஐகான்கள், பட்டன்கள் மற்றும் டேப்கள் செயலியின் தோற்றம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் தெரிகிறது. புதிய அப்டேட் பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ப்ரோஃபைல் க்ரிட்டில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தாது.