(UTV|INDIA)-சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் மின்பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை. கோயம்பேடு – அசோக்நகர் இடையே மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோளாறை சரிசெய்யும் பணிகள் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் குறைந்த வேகத்துடன் ஒரு பாதையில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டுள்ளனர்.
முன்னதாக சிக்னல் காரணமாக நேற்றும் மெட்ரா ரயில் சேவை பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.