சூடான செய்திகள் 1

2018 தொலைக்காட்சி, கலை அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்…

(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டு தொலைக்காட்சி , கலை அரச விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இன்று (21) இரவு இடம்பெறவுள்ள இந்த விருது விழா 13 ஆவது தடவையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகச்சிறந்த தொலைக்காட்சிப் படைப்புக்களை அறிமுகப்படுத்துதல், அவற்றிற்கு பங்களிப்புச் செய்த கலைஞர்களைப் பாராட்டுதல் மற்றும் ஊக்குவித்தல் என்பன இதன் நோக்கமாகும் என்று கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விருது விழா தொடர்பான இணைப்பாளர் ஜே.பீ.ஜனப்பிரிய தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகங்களில் இருந்து சிறந்த நடிகர், நடிகை, சிறந்த நாடகம், ஓரங்க நாடகம், தொலைக்காட்சி ஆய்வு நிகழ்ச்சி என 53 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவும் கலந்துகொள்ளவுள்ளார்.

 

 

 

Related posts

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக விமானமொன்று தரையிறக்கம்…

மாத்தறை சம்பவம்-சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு