கிசு கிசுசூடான செய்திகள் 1

13 மணித்தியாலங்கள் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு?

(UTV|COLOMBO)-பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் 13 மணித்தியாலங்கள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய வலைத்தளங்கள் முழுமையாக செயலிழக்காத போதும், பல சேவைகளை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும், பல பகுதிகளில் சில நிமிடங்கள் பேஸ்புக் தடைப்பட்டு மீண்டும் இயங்கியதாகவும் அறிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் கணக்கிற்கு ஏதேனும் பிரச்சினை தோன்றியுள்ளதா என குழப்பமடைந்து இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்திற்கு முறைப்பாடுகளை பேஸ்புக் பயனாளிகள் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – சுமார் 80,000 பேர் பாதிப்பு

இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்டனுக்கு கொரோனா

பேலியகொடையில் பாரிய தீ விபத்து