விளையாட்டு

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் 100 வது டெஸ்ட் போட்டி இலங்கையுடன்

 

(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் தமது நூறாவது டெஸ்ட் போட்டியினை எதிர்வரும் 15ஆம் திகதி விளையாடவுள்ளனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற சர்வதேச அணிகளில் இறுதியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணியாக கொழும்பு போட்டியின் பின்னர் பங்களாதேஷ் அணி திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அணி அந்தஸ்தை பெற்ற பங்களாதேஷ் அணி தமது முதலாவது டெஸ்ட் போட்டியினை கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு நவம்பர் மாதம் விளையாடிய அதேவேளை, 16 வருடங்களின் பின்னர் நூறாவது போட்டியில் விளையாடவுள்ளது.

இலங்கை வரும் பங்களாதேஷ் அணி இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றை மொரட்டுவையிலும், முதலாவது டெஸ்ட் போட்டியினை காலியிலும் அதனைத் தொடர்ந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 100வது போட்டியினை பீ. சரவணமுத்து விளையாட்டுத் திடலில் மேற்கொள்ளவுள்ளது.

Related posts

இறுதிப் போட்டிக்கு நுழைந்தது ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி

பங்களாதேஷை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Novak Djokovic கொரோனாவில் இருந்து பூரண குணம்