கிசு கிசு

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவு?

(UTV|COLOMBO)-இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவாகவுள்ளது.

இலங்கையில் அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் இன்றைய தினம் ஒரு தீர்மானமிக்க நாளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக நிகழ்ந்த அரசியல் மாற்றங்களும் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளிலேயே நிகழ்ந்துள்ளமையினால் இன்றைய தினமும் ஒரு தீர்மானமிக்க சம்பவம் இடம்பெறும் என பல தரப்பினரால் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு ஆரம்பமாக கடந்த 26ம் திகதி வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார்.

அதேநாளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக பல்வேறு வடிவங்களில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன.

இந்த நெருக்கடிகளை தீர்வு காணும் நோக்கில் கடந்த 9ம் திகதியான வெள்ளிக்கிழமை அதிரடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட நீதிக்கான புரட்சியில் ஆளும் தரப்பு தோல்வி அடைந்து எதிர் தரப்பினர் தமது பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இந்நிலையில் 16ம் திகதியான இன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு தீர்மானமிக்க முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமையான இன்று ஒரு புரட்சி நடக்கும் என அரசியல் தரப்பு மற்றும் பொது மக்கள் தரப்பினரால் நம்பப்படுகின்றது.

இன்றையதினம் 1.30 மணியளவில் மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

 

 

 

Related posts

தன்னால் பிறருக்கு பரவலாம் என்ற அச்சத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான தாதி தற்கொலை

ஹரின் பெர்னாண்டோ தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு

அமைச்சுப் பதவியை ஏற்க மறுக்கும் ‘சமல்’