சூடான செய்திகள் 1

பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த நபர் கைது

(UTV|COLOMBO)-முச்சக்கர வண்டியை பயன்படுத்தி கண்டி பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்லேக்கலை காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் போது கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணத் தொகை ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சொல்வோருக்கு மயக்கமருந்து கலக்கப்பட்ட குளிர்பானத்தை வழங்கி இந்த கொள்ளைகளை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Related posts

நுவரெலியா – தலாவாக்கலை பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

ஜூலை மாதத்தில் யூரோ-4 எரிபொருள் இலங்கை சந்தையில்

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது