விளையாட்டு

தில்ஹார லொக்குஹெட்டிகே மீது ஊழல் குற்றச்சாட்டு

(UTV|COLOMBO)-இலங்கை சர்வதேச கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே மீது எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டுபாயில் இடம்பெற்ற T10 கிரிக்கட் போட்டி தொடர்பிலேயே தில்ஹார லொக்குஹெட்டிகே மீது இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் மீது 03 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூறியுள்ளது.

அதன்படி அவர் இன்றிலிருந்து (13) 14 நாட்களுக்குள் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூறியுள்ளது.

 

 

 

Related posts

Kandy Warriors இனை தோற்கடித்த Jaffna Kings

இலங்கை அணி வெற்றி

முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் பெற்ற ஓட்டங்கள்