சூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனுக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர் ஜீ. எல். பீரிஸ், சட்டத்தரணி பிரேமநாத் சீ. ​தொலவத்த, பேராசிரியர் சன்ன ஜயசுமன,அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த மனுக்களை இன்று உச்சநீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 891 ஆக அதிகரிப்பு

இன்று தேசிய துக்கதினம்…

தற்போது வரை 1446 பேர் குணமடைந்தனர்