வகைப்படுத்தப்படாத

ஆங் சான் சூகியின் விருது மீளப்பெறப்பட்டது

(UTV|MIYANMAR)-மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு, சர்வதேச மன்னிப்புச்சபையினால் வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது.

சூகிக்கு வழங்கப்பட்டிருந்த பகுத்தறிவுக்கான தூதுவர் என்ற கௌரவப்பட்டமே இவ்வாறு மீளப்பெறப்படவுள்ளது.

2009ஆம் ஆண்டு மியன்மார் ஆட்சியாளர்களால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மாரில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக அவர் குரல்கொடுக்காதிருந்தமைக்காக விருது மீளப் பெறப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது.

இந்த இராணுவ அடக்குமுறைகள் காரணமாக 7 இலட்சத்துக்கும் அதிகமானோர் அயல் நாடாகிய பங்களாதேஷுக்கு தப்பிச்சென்றிருந்தனர்.

 

 

Related posts

முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் மழை

வைரலாக பரவும் எலி பர்க்கர்-(VIDEO)

Russia – China joint air patrol stokes tensions