சூடான செய்திகள் 1

ஈயினால் பரவும் தோல் நோய்…

(UTV|COLOMBO)-மத்திய மாகாணத்தில் சிறிய ஈயினால் பரவிவரும் தோல் நோய் தொடர்பில் அவதானம் செலுத்தமாறு மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

லிஸ்மானிய என அழைக்கப்படும் இந்த நோய் சிறிய ஈயினால் பரவுவதுடன், ஈ கடித்த பின்னர் தோல் சிவப்பு நிறம் அடைந்து அரிப்பு ஏற்படும் என மருத்துவர் குறிப்பிடுகின்றார் .

இதேவேளை, ஒவ்வொரு வாரமும் புதிதாக ஆறு எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் கடந்த வருடமே எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

அதன் எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ள நிலையில், இதுவரை 4 ஆயிரத்து 200 எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் முதியோர்த் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு

நுகர்வோர் சட்டங்களை மீறிய 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!