சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும்.

கிழக்கு மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“GAJA” என்ற சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 900 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.5N, கிழக்கு நெடுங்கோடு 87.4E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் இருக்கும் மீனவர்களுக்கும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

 

 

Related posts

ஜனாதிபதி முன்னிலையில் புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சரும் பதவியேற்பு

“வெள்ளிக்கிழமையும்- உயிர்த்த ஞாயிறு தினத்தன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]