(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.