சூடான செய்திகள் 1

தெப்புவன காவற்துறை உத்தியோகத்தர் சனத் குணவர்த்தன முறைப்பாடு

(UTV|COLOMBO)-தமது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி நான்கு உயர் காவற்துறை அதிகாரிகளுக்கு எதிராக தெப்புவன காவற்துறை உத்தியோகத்தர் சனத் குணவர்த்தன முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட மணல் பாரவூர்தி ஒன்றை தெப்புவன காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி விடுவித்துள்ளதாக கூறி குறித்த காவற்துறை உத்தியோகத்தர் கடந்த மாதம் 3 ஆம் திகதி தமது துப்பாக்கியுடன் தெப்புவன நகரில் அமைதியற்ற வகையில் செயற்பட்டார்.

பின்னர் அவரை காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட காவற்துறை உத்தியோகத்தர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதன்பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட தெப்புவன காவற்துறை நிலைய அலுவலகர் சனத் குணவர்த்தன மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் தாம் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே அவர் நேற்றைய தினம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
 

 

 

Related posts

அமைச்சர்களின் அரச நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை சமர்பிப்பு

வாழ்வுரிமையை இலங்கை அரசியல் யாப்பில் சட்டமாக்கப்பட வேண்டும்

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்