சூடான செய்திகள் 1

கோத்தாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தில், ரூபா 33 மில்லியன் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழான 07 குற்றப் பத்திரிகைகளின் கீழ், கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி, சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

குறித்த வழக்கின் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேர் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி முதல் முறையாக மூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ நிதி மோசடி பிரிவில் ஆஜர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு அமைச்சரவை அனுமதி