சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அரசியல் சபை

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மத்திய செயற்குழுவுவை விட உயரிய 15 உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் சபை ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அகில இலங்கை செயற்குழுவில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர கட்சியின் யாப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

தேர்தலை நடத்துதல் அல்லது பாராளுமன்றத்தை கலைத்தல் அல்லது மக்கள் கருத்துக் கணிப்பு இடம்பெறாது என்று ஜனாதிபதி இதன்போது கூறியதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறினார்.

 

 

 

 

Related posts

தொற்றுக்குள்ளான மேலும் நான்கு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு

மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும்

சொந்த வாகனம் வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலா செல்வோரும் வரி செலுத்த வேண்டும்