(UTV|COLOMBO)-தலவாக்கலை நகரில் மரக்கறிகளின் விலை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.
நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் மட்டுமன்றி தம்புள்ள மத்திய நிலையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான மரக்கறிகள் 200 ரூபாவிற்கும் அதிகமான விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.