வகைப்படுத்தப்படாத

தொடர் குண்டுவெடிப்பினால் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி

(UTV|IRAQ)-ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர்.

பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஏடன் நகரில் பஸ் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது குண்டு வெடித்தது. இதில் ஒரு ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அல்-சாகா நகரில் அரசு ஊழியர் ஒருவரின் காரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்தனர். இதை அறியாமல் அவர் அந்த காரில் பயணித்த போது, குண்டுவெடித்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

சர்தார் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதே போல் பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 2 பஸ்களில் குண்டு வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.

 

 

 

Related posts

இஷா அம்பானியின் திருமணம்

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம்

Drug peddler arrested in Tangalle