(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் இன்று நிதியமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை வேதன உயர்வு தொடர்பான பெருந்தோட்ட துறைமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக தோல்வியடைந்திருந்தது.
இந்தநிலையில், தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட துறைமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறப்போவதாக தெரிவித்திருந்தன.
இதனை தொடர்ந்து தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன முரண்பாட்டை தீர்ப்பதற்கு தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என தற்போதை பிரதமர் தமக்கு வாக்குறுதி வழங்கியதாக அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.
இதன்படி இன்றைய தினம் தொழிற்சங்கங்களுக்கும், நிதியமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]