வகைப்படுத்தப்படாத

நாய்கள் மூலம் மலேரியாவை கண்டுபிடிக்கலாம்

மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர். கொசுக்களால் பரவும் இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.

இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் காலுறையை (சாக்ஸ்) நாய்களிடம் கொடுத்து மோப்ப பிடிக்க செய்து அதன் மூலம் மலேரியா நோயை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்த ஆய்வை மேற்கொண்டது.

நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் காலுறைகள் சேகரிக்கப்பட்டு நாய்களிடம் மோப்ப சக்திக்கு வழங்கப்பட்டது.

அதில் 70 சதவீதம் பேருக்கு மலேரியா நோய் இருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன. அதற்காக அந்த நாய்களுக்கு சிறப்பு மோப்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

எனவே மலேரியா நோயை கண்டறிய நாய்களுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று புற்று நோய்கள், நீரிழிவு நோயினால் ஏற்படும் கோமா போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என கூறியுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களின் நிலை…

ACMC Deputy Leader resigns from party membership

இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகை