சூடான செய்திகள் 1

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் கைது

(UTV|COLOMBO)-தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த 4 மாணவர்களை மீளவும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, மேற்படி மாணவர்கள், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்து, அதனை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, கடந்த இரு வாரங்களாக பல்கலைக்கழக நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை அங்கிருந்து அகற்றுமாறு, பொலிஸாருக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே கட்டளை பிறப்பித்திருந்த போதிலும் மாணவர்கள் வௌியெற்றப்படவில்லை.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

எந்த மாற்றம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்ப இந்த அரசாங்கத்தால் முடியாது

சில பிரதேசங்களுக்கு மின்சாரம் தடை