கிசு கிசு

பொலிஸாரை கெட்ட வார்த்தையில் திட்டித் தீர்த்த மருத்துவர்…

(UTV|COLOMBO)-கடுமையான மது போதையில் பொலிஸாரை கெட்ட வார்த்தையில் திட்டித் தீர்த்த மருத்துவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது மனைவியை துன்புறுத்தியதாக மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மருத்துவரை கைது செய்துள்ளனர்.

அதிக மதுபோதையினால் காரியாலயத்தில் விழுந்து கிடந்த நிலையில், சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியான ரோஹித டி சில்வா என்பவரே இவ்வாறு அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான மருத்துவரை பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது பொலிஸாரை மிகவும் கெட்ட வார்தையில் திட்டித் தீர்த்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபரான மருத்துவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

1000 லீற்றர் மதுவை குடித்த எலி?

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை?

திமுத் மற்றும் மஹேல இருவரும் ஒரே நிலைப்பாட்டில்