(UTV|COLOMBO)-உலக சந்தையின் எதிர்வுகூறலுக்கு அமைய எதிர்வரும் வருடத்தின் பெப்ரவரி மாதம் வரையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எல்லைக்கு மீறியளவு எரிபொருள் விலையானது அதிகரிக்குமேயாயின் அதனை அரசாங்கம் பொறுப்பேற்கும் எனவும் அமைச்சர் நேற்று(09) பாராளுமன்றில் கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா டொலரானது தொடர்ந்தும் அதிகரிக்கக்கூடும் எனவும் எவ்வாறாயினும் அதற்கு சக்தியுடன் முகங் கொடுக்க அரசுக்கு ஆளுமை உண்டு எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
“விலைச் சூத்திரத்தின் ஊடாக எரிபொருள் விலையானது அதிகரிக்கும் போது அதிகரிக்கும், குறையும் போது குறையும்.. எதிர்பாராவிதமாக எரிபொருள் விலை சூத்திரமானது அறிமுகப்படுத்திய நாள் முதல் எரிபொருள் விலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.. நாம் மாதம் ஒரு முறை எரிபொருள் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்துகிறோம்.
ஆனால், இந்தியாவில் எரிபொருள் விலையானது நாள்தோறும் மாற்றமடைகிறது. நாம் உணர்வுபூர்வ அரசாகும். பெப்ரவரி மாதம் வரையில் அதிகரிக்கப்படும் என எதிர்வு கூறப்படுகின்றது. எதிர்பார்த்த எல்லையினை தாண்டி அதிகரிக்குமாயின் அரசு அதனை பொறுப்பேற்கும். குறைந்தால் அதற்கான சலுகையினை வழங்குவோம்.. எந்த விலைச் சூத்திரம் என்றாலும் விலை அதிகரிக்கப்படுமாயின் அதற்கு அரசு பொறுப்பு.. .”
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]