சூடான செய்திகள் 1

11 வயது சிறுமியை கொடுமைடுத்திய தாய்…

(UTV|COLOMBO)-பெற்று வளர்த்த பிள்ளைக்கு தாய் ஒருவர் சூடுவைத்து வந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாயால் இரும்புக்கம்பியை சூடாக்கி 11 வயதுடைய சுதாகரன் மேனகா என்னும் சிறுமிக்கு சூடு வைக்கப்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எருவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றுவரும் குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்றபோது காயங்களை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள் குறித்த சிறுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு என்பனவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)

 

 

 

Related posts

புத்தளத்தில் பயணப்பையால் இரவு முழுவதும் பதட்டம்!!

விமான பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு

மந்திரி உள்ளிட்ட மூவர் கைது