சூடான செய்திகள் 1

ஐந்தாம் தர புலமைபரீட்சையில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்ற மாணவர்கள்…

(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமை பரீசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

அதன்படி, அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பிலியந்தல -சோமவீர சந்ரசிறி வித்தியாலயத்தைச் சேர்ந்த புமித் மெத்துனுல் வித்தானகேவும், வெயங்கொட – சென்.மேரிஸ் கல்லூரியின் குருகுலசூரிய சனுபா திமத் பெரேராவும் பெற்றுள்ளனர்.

அவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.

மூன்றாம் இடத்தில் ரெஜி ரணத்துங்க ஆரம்ப வித்தியாலயம் – மினுவங்கொடயைச் சேர்ந்த ஹெட்டியாராச்சி செனுஜி அக்கித்ம ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார்.

அதேநேரம், தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை இருவர் பகிர்ந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் மகேந்திரன் திகழொளிபவனும், சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கன் நதியும் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இவர்கள் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தை வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலையை சேர்ந்த பாலக்குமார் ஹரித்திக்ஹனுசுஜா பெற்றுள்ளார்.

அவர் 197 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் அகில இலங்கை ரீதியில் அவர் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

 

சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள்:-

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/10/SCHOLERSHIP-EXAM-BEST-.jpg”]

 

 

 

 

 

 

 

 

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுபுள்ளிகள்:

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/10/SCHOLERSHIP-EXAM.jpg”]

 

 

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

சஞ்சய் ராஜரட்ணம் சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம்

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை