சூடான செய்திகள் 1

களுத்துறை – தெம்புவன சம்பவம்-பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-களுத்துறை – தெம்புவனவில் நேற்று(03) கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(04) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத மணல் கடத்தல் பாரவூர்தியொன்று குறித்த பொலிஸ் அதிகாரியின் பொறுப்பின் கீழ் கொண்டு வந்த நிலையில் , பின்னர் தெம்புவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்து, தனக்கு நீதி கிடைக்காவிடின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொள்வதாக தெரிவித்து குறித்த பொலிஸ் அதிகாரி நேற்று(03) எதிர்ப்பில ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த பொலிஸ் அதிகாரியின் மனநிலை தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ளுமாறு குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக மீண்டும் பதவியேற்பு.

“மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவே சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்கள்”

பஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தம்…