வகைப்படுத்தப்படாத

ஒரே நாளில் 33 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து சாதனை…

(UTV|INDIA)-பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பெங்களூரு மாநகராட்சி சார்பில் ‘பிளாக் ரன்’ என்ற பெயரில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு மாநகராட்சியுடன் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் கைகோர்த்தன.

இதில், மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டதோடு, அவர்கள் குழு குழுவாக பிரிந்து நகரின் 50 இடங்களில் சாலையோரம், பூங்காக்களில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். காலை 9 மணியில் இருந்து இரவு 8.15 மணி வரை அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர்.

தண்ணீர் பாட்டில்கள் உள்பட 33 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை அவர்கள் சேகரித்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதன் மூலம், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பில் முந்தைய கின்னஸ் சாதனையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மூடப்படவுள்ள ஈஃபில் கோபுரம்…

හිටපු අමාත්‍ය රිෂාඩ්ට එරෙහිව කිසිඳු චෝදනාවක් බුද්ධි අංශ වාර්තාවේ නැහැ – අගමැති

මීගමුව මහ නගර සභාවේ විපක්ෂ නායක සැකපිට අත්අඩංගුවට